Followers

திருக்குறள்

Tuesday, July 19, 2011

மின்னலினால் பூமிக்கு நன்மையும் விளைகின்றன

இடி மின்னல் என்பது இயற்கை யின் ஒரு தோற்றப்பாடு ஆகும். பிரமாண்டமான
வெளிச்சத்தையும், வெப்பத்தையும் தருகின்ற நிகழ்வு மின்னல் தாக்கம் ஆகும்.

மின்னல் என்பது அதிகளவான 'வோல்ட்' கொண்ட ஒரு மின் பாய்ச்சலாகும்.

மின்னல் மின்பொறியானது, மேகத்திற்கும், மேகத்துக்குமிடையி லும், மேகத்திற்கும்,
தரைக்குமிடை யிலும், அல்லது முகில்களின் பகுதிகளுக்கிடையிலும் ஏற்படலாம்.

இதனை வாகன பற்றரியொன்றுடன் ஒப்பிடலாம். அதில் இரு கம்பிகளை இணைக்கும் போது,
தொடுகையும் பிரதேசத்தில் பொறி ஏற்படுகின்றதல்லவா? அதனைப் போன்றது தான் இதுவும்.

மின்னலை உருவாக்குகின்ற முகில், கூர்வடிவான 'குமுலோனியஸ்' எனப்படுகின்ற விசேட
வகைக்குரிய மேகமாகும். இம்முகிலின் மேல் முனையில் அதிகளவான நேரேற்றங்கள் குவிந்து
காணப்படும். அம் முகிலின் தாழ்முனையில் மறை ஏற்றங்கள் காணப்படும்.

நேரேற்றம் மறையேற்றம் தொடர்புறும் சந்தர்ப்பங்களில், அவை இரண்டுக்குமிடையே பொறி
ஏற்படும். இப் பொறி நிலம் நோக்கிச் செலுத்தப்படும்.

அப்போது, நிலத்தில் காணப்படுகின்ற பொருட்கள் மேல்நோக்கி ஏற்றத்தைச் செலுத்துகின்றன.

முதலில் ஏற்படும் ஏற்ற சங்கமத்தினால் பெருமளவான மின் உற்பத்தியாக்கப்படும்.

அடுத்து, முகிலிலுள்ள மறையேற்றங்கள், படியிறங்கலாம். நிலத்திலுள்ளவை, அதற்கு எதிரான
ஏற்றங்களை மேல்நோக்கிச் செலுத்துகின்றன.

ஏற்றங்கள் சந்தித்து சங்கமமாகும் முதல் பொருளினால் ஒளிப்பிளப்பு ஏற்படும்.

முதலில் இறங்கும், உச்சமின்னோட்டம் 30 றிதீ ஆகும். இது 250 கிலோவாற்றுவரை செல்லலாம்
எனப் பதியப்பட்டுள்ளது. அவ்விடத்தில் வெப்ப நிலை 40,000 பாகை கெல்வின் காணப்படலாம்.
இது மறையேற்றத் தரை அடிப்பு மின்னல் எனப்படும்.

'நேர்மின்' தரை அடிப்பு மின்னலும் ஏற்படுகின்றது. இது 500 கிலோ வாற்று ஆக
இருக்கலாம் எனப் பதிவாகியுள்ளது. இது பாரிய வெடிப்புக்கள், காடுகள் தீப்பற்றல்
என்பவைகளை ஏற்படுத்தும்.

அதிகமாக மின்னல், பல்முனைகளினூடாகத் தரைத் தாக்குதலை ஏற்படுத்துகின்றது. உயரமாக
உள்ள பொருளிலிருந்து மேல் நோக்கிச் செலுத்தும் ஏற்றம் முதலில் பொறியை ஏற்படுத்தும்.

மின்னல் ஏற்படும் வேளைகளில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதைப்
பார்ப்போம்.

வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்பது நன்று.

உலோகப் பொருட்களுடன் தொடுகை ஏற்படுத்த வேண்டாம்.

மரத்தின் கீழ் நிற்க வேண்டாம்.

நீரிலுள்ள, ஈரலிப்புள்ள இடங்களை விட்டு அகற்றுவிடுங்கள்.

தொலைபேசித் தொடர்பாடலை நிறுத்துங்கள்.

திறந்த வெளியில் தனிமையில் நிற்காதீர்கள்.

திறந்த வாகனங்களில் பயணம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மின்னலின் போது, ஒளியும், சத்தமும், ஒருங்கே உருவாகினாலும், வெளிச்சத்தை முதலில்
கண்ட பின்பே சத்தத்தைக் கேட்கின்aர்கள்.

மின்னலின் போது, வளிமண்ட லத்திலுள்ள நைதரசன் வாயு, ஒட்சி சனுடன் தாக்கமுற்று,
றைத்திரிக் ஒட்சைட்டாகப்படுகின்றது. இது மழை நீருடன் கரைந்த நிலையில் நிலத்தை
அடைகின்றது. இவ்வாறே மண், நைதரசன் வளத்தைப் பெற்றுக் கொள்வதை அறிவீர்களா? மின்னல்
நன்மை பயக்கின்றதல்லவா?

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.