Followers

திருக்குறள்

Tuesday, July 19, 2011

இதனால தான் நீண்ட நேரம் கனவு

உடலின் வலதுபக்கச் செயல்பாடுகளை இடதுபுற மூளையும், இடதுபக்கச் செயல்பாடுகளை வலதுபுற
மூளையும் கட்டுப்படுத்துகின்றன. பகல் நேரத்துல நாம வேலை செய்யும்போது, உடலின் வலது
பகுதியைத்தான் அதிகம் பயன்படுத்துறோம். இதனால பகல் முழுவதும் மூளையின் இடது புறமே
அதிகமாக செயல்படுது.

எனவே இரவு தூங்கும்பொழுது இடதுபுற மூளை சீக்கிரம் ஓய்வெடுக்க, வலதுபுற மூளை
சாவகாசமாக இயங்குகிறது. இந்த நிலையில ஏற்படுற பிம்பங்களைத்தான் `கனவு'ன்னு உளவியல்
அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக தூக்கமானது 4 நிலைகள்ல உண்டாகுது. ஒவ்வொரு நிலையும் 70 நிமிடங்கள்ல இருந்து
100 நிமிடங்கள் வரைக்கும் தொடரும். இவற்றில் நான்காவது நிலைதான் ஆழ்ந்த தூக்கம்.
இந்த நிலையில தான் கனவு தோன்றுவதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கிறாங்க. அதிகாலையில
ஏற்படுற இந்த ஆழ்ந்த நிலை தூக்கம், சுமார் ஒரு மணி நேரம் கூட நீடிக்கலாமாம். இதனால
தான் சில பேரு நீண்ட நேரம் கனவு கண்டதா சொல்றாங்க.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.