Followers

திருக்குறள்

Thursday, August 18, 2011

உன் வீட்டுக் கண்ணாடி

      




      உலக அழகியின் 
      புகைப்படத்தை
      உன் வீட்டில்
      கண்ணாடி என்பீர்களா?
      *
      உனதழகை
      நீ பார்க்கும்பொழுது
      பிரதிபலிக்கிற கண்ணாடி
      நீ பார்க்காதபொழுது
      உள்வாங்கிக் கொள்கிறது தெரியுமா?
      *
      உன் வீட்டுக் கண்ணாடிக்கு
      தினமும் உனதழகை ரசிக்கும்
      அதிர்ஷ்டம் தந்த 
      மச்சங்களாய் மின்னுகின்றன
      நீ ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டுகள்.
      *
      நீ வரைந்த 
      கண்ணாடி ஓவியங்களின்
      அழகை விசாரிக்கும்பொழுது
      உன் 'கண்'ணாடியதை 
      எப்படி ஓவியமாக்க?
      *
      உன்னை அழகாய்க் காட்டியதற்காக
      நீ முத்தமிட்ட 
      கணத்திலிருந்து
      தன்னை அழகாய்க் காட்டிக்கொள்ள 
      தவிக்கிறது
      உன் வீட்டுக் கண்ணாடி.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.