Followers

திருக்குறள்

Thursday, August 18, 2011

உனது முத்தங்களை

      


      எனது முத்தங்கள்
      ஆடைகளற்று நாணுகின்றன.
      உனது முத்தங்களை 
      அணிவித்தாலென்ன?
      *
      இறுதி அத்தியாயத்தை 
      முதலில் வாசித்துவிட்டு
      பிறகு நாவலைத் துவங்கும் 
      வாசகனைப்போல
      இறுதிவரியில் பொதிந்திருக்கும்
      உனது முத்தங்களை அள்ளிய பிறகே
      உனது கடிதங்களை வாசிக்கத் துவங்குகிறேன்.
      *
      நான்
      நனைந்தபடி 
      ரசிக்கும் பெருமழை
      நீ.
      *
      செடிக்கு உரமாகட்டுமென
      காலையில் சூடியப் பூக்களை
      செடிக்கருகிலேயே உதிர்க்கிறாய்.
      வாடிய பூக்களில் 
      வீசும் உனது கூந்தல்மணத்தால்
      அந்தியிலேயே மலர்கின்றன 
      புதிய மொட்டுகள்.
      *
      உலகின் பேரழகான கவிதை
      உலகின் பேரழகான வாசகிக்கென
      எழுதப்படாமல் இருக்கிறது.
      எப்பொழுது கவிதை 
      வாசிக்கத் துவங்குகிறாய்?
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.