காதல் என்பது புனிதமானது. அது இருவரின் மனதிலும் தோன்றும். அதுவே ஒருவர் கூறி ஒருவர் ஏற்கவில்லை என்றால் அது ஒருதலைக் காதல் ஆகிவிடும். அப்படி காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா என்ன? இதனால் வாழ்க்கை தான் சீரழியும்.
பொதுவாக ஒருதலைக் காதலானது ஒருவர் மற்றொருவரை இம்ப்ரஸ் பண்ணாமல் வராது. அப்படி காதல் வந்து ஒப்புக் கொள்ளவில்லை என்றால் கவலை வேண்டாம். காதல் தோல்வி ஆகிவிட்டது என்று சிலர் தற்கொலை செய்கிறார்கள். அப்படி செய்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள். சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல் என்கின்றனர் நிபுணர்கள்.
வாழ்க்கை என்பது ஒரு முறை தான் வரும். அந்த வாழ்க்கையை ஒரு வரம் என்றும் சொல்லலாம். அப்படி கிடைக்கும் அற்புத வாழ்க்கை சாதாரண விஷயமல்ல. நாம் தான் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே!
மீண்டும் பழைய பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு யாராவது இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். அப்படி புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.
சொல்லப்போனால் காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள். ஆனால் காதலில் தோற்றவர்கள் அந்தக் காதலை வாழ்நாள் முழுவதும் மறக்காமல், மனதிற்குள் ஒரு தாஜ்மகாலைக் கட்டி தோற்றுப்போன காதலை நினைத்து பூஜித்து வருவார்கள்.
ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் ஒரு சுகமான அனுபவமே! காதல் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்கலாம் என்று சிலர் கேட்கலாம். உலகில் காதல் இல்லாத எவரும் இல்லை, அந்த காதல் சுவாசம் மாதிரி ஒரு நொடியும் நம்மை விட்டு போகாது. அடுத்த காதல் எப்போது வேண்டுமானாலும் வரும். எனவே கவலைப்படாமல் தயாரா இருங்க!
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment