கைகளில் எத்தனை வளையல்கள் போட்டிருக்கிறீர்கள்? என்று கேட்க இப்போது பலரும் தயாரில்லை! என்ன டிசைன் வளையல் போட்டிருக்கிறாய்? என்றுதான் கேட்கிறார்கள். அதனால் செல்வச் செழிப்பை வளையல்களின் எண்ணிக்கை மூலம் காட்டுவது குறைந்து வருகிறது. புத்திசாலித்தனமான புதிய புதிய செலக்ஷன்தான், அவர்களைப் பற்றி மற்றவர் களை பேசவைக்கிறது.
இப்போது பெண்கள் அற்புதமான கை வேலைப் பாடுகளுடன் கூடிய டிசைனர் வளையல்களைத் தான் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். குந்தன் ஸ்டோன் வளையல்களும், ஆன்டிக் டிசைன் வளையல்களும் பெண்களின் இதயங் களை சுண்டி இழுக்கிறது.
`ஆஹா.. சூப்பர்' என்று சொல்லக்கூடிய 16 வகை டிசைனர் வளையல்கள் இங்கே உங்களுக்காக அணிவகுக்கின்றன. பார்த்து, எப்படி எல்லாம் வளையல் டிசைன்கள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்!
1, எனாமல் ஒர்க் இடம்பெற்றிருக்கும் டிசைனர் சிக்சாக் வளையல்கள்.
2, எனாமல், ஒயிட் கோல்டு, பிரேசியஸ் ஸ்டோன் போன்றவைகள் கண்களைக் கவரும் விதத்தில் இடம் பெற்றுள்ள அலங்கார வளையல்.
3, ரேடியம் கோட்டிங் கொடுத்துள்ள ஹெட் வளையல்.
4, ரூபி ஸ்டோன் பொருத்தியுள்ள எத்னிக் வளையல்.
5, சிங்கப்பூர் நெட் வளையல்.
6, குந்தன் ஸ்டோன் வளையல்.
7, ரூபி கற்கள் பதித்த செட்டி நாட்டு மாடல் வளையல்.
8, எனாமல் ஒர்க் ஸ்டோன் வளையல்.
9, ஒயிட் கோல்டு, எனாமல், பிரேசியஸ் ஸ்டோன் சேர்ந்த வளையல்.
10, செட்டிநாட்டு ரூபி வளையல்.
11, எனாமல் ஒர்க் இடம்பெற்றிருக்கும் ஆன்டிக் வளையல்.
12, முத்து, ரூபி போன்றவைகளை பொருத்திய ஆன்டிக் வளையல்.
13, ரேடியம் டிசைன் செய்யப்பட்டுள்ள சிக்சாக் வளையல்.
14, பிரேசியஸ் ஸ்டோன் பொருத்தியுள்ள டபுள் டிசைன் வளையல்.
15, ஒயிட் கோல்டு நெட் வளையல்.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment