காதலிப்பவர்களுக்கு கண் தெரியாது என்பது முட்டாள்களின் வாதம் என்று அதிரவைக்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் விழுந்தவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்குமாம் அதற்கான ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும் என்று கூறி காதலர்களின் வாழ்வில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றனர் ஆய்வாளர்கள். கண்ட உடனே காதலில் விழுபவர்கள் சிலர். பேசி பழகிய பின் காதலிப்பவர்கள் சிலர் காதலில் விழுந்துவிட்டால் அவர்களுக்கு இறக்கை முளைத்துவிடும். கண்களை திறந்து கொண்டே காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். காதலிக்க ஆரம்பித்த உடன் அவர்களின் உடலில் நிகழும் ரசாயன மாற்றம் என்னென்ன என்று நிபுணர்கள் பட்டியிலிட்டுள்ளனர். நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன். பட்டாம்பூச்சி பறக்கும் உங்களுக்கான நபரை நீங்கள் கண்ட உடன் மச்சி இவதாண்ட உன் ஆளு என்று மூளை மணியடிக்க ஆரம்பித்து விடுமாம் ( அப்படியா?) அப்போது மூளையில் டோபமைன் எனப்படும் ரசாயனம் சுரக்குமாம். அது உடலுக்கு சக்தியை தருவதோடு மூளையையும் சுறுசுறுப்பாக்குகிறதாம். அதனால்தான் காதலிப்பவர்களின் கனவுகளில் வானவில் வருகிறது. அவர்களுக்கு இறக்கை முளைக்கிறது. அவர்கள் செல்லும் இடமெங்கும் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறது. ( இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பழைய பாரதிராஜா படத்தை பார்க்கலாம்) உடல் மெருகேறும் காதலிப்பவர்கள் உடல் கட்டுப்பாட்டோடு அழகாக இருக்குமாம். அவர்களின் உடலில் ஆட்டோமேடிக்காக neurotransmitter அதிகரிக்குமாம். அட்ரீனலின் உற்பத்தி சிறிதளவு குறையுமாம். அதனால் அவர்களுக்கு பசி உணர்வே ஏற்படுவதில்லை. ஜிம் போகாமலேயே உடலில், முகத்தில் ஒரு பளபளப்பு ஏறியிருக்குமாம். அதனால் காதலில் விழுந்தவர்களை பையன் ஒரு மார்க்கமாவே இருக்கான் என்னன்னு கவனிங்க என்று அப்பா, அம்மாவிடம் உறவினர்கள் உசுப்பேற்றி விடுகின்றனர். புத்திசாலியாவார்கள் காதலிப்பவர்கள் முட்டாள்களா? யார் சொன்னது. அப்படி சொல்பவர்கள்தான் முட்டாள்கள், காதலின் அருமை தெரியாதவர்கள். காதல் உண்மையிலேயே முட்டாளாக இருப்பவர்களைக் கூட அறிவாளியாக்குமாம். காதல் வசப்பட்டவர்களுக்கு மூளை செல்களை புதிதாக வளரச் செய்யும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது என்று இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளமை திரும்பும் காதலிப்பவர்களுக்கு முதுமை ஏற்படாதாம். அவர்கள் என்றைக்கும் இளமையாக இருப்பார்களாம். அந்த அளவிற்கு அவர்களுக்கு இளமையை தக்கவைக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் சுரக்குமாம். காதலிப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதால் அவர்களுக்கு கவலை என்பதே ஏற்படாதாம். நோய் தாக்காது காதலிப்பவர்களை விட ஜோடி கிடைக்காமல் தனியாக இருப்பவர்கள்தான் விரைவில் மரணத்தை தழுவுகின்றனராம். காதலிப்பவர்களுக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாதாம். ரொமான்ஸ் மூடில் இருப்பவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பு குறைவாகத்தான் சுரக்குமாம். காதலிப்பவர்களுக்கு இதயநோய் என்பதே ஏற்படாதாம். காதலிப்பவர்களுக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதாம். இன்னமும் ஏன் வெயிட் பண்றீங்க,போய் சீக்கிரம் லவ் பண்ணுங்கப்பா! |
|
|
|
|
மறுமொழிப்பெட்டி: | |
தமிழிலும் மறுமொழியிடலாம் |
நெஞ்சார்ந்த நன்றிகள்......
அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment