பார்களில் அமர்ந்து ஒரு கையால் பீரையும் இன்னொரு கையால் கடலையையும் உள்ளே தள்ளுபவர்களா நீங்கள் ? உங்களுக்கான தகவல் இது.
பீர், வைன், கடலை இவையெல்லாம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி வரும் வாய்ப்பையே சந்தேகத்துக்குள்ளாக்குகிறது என்கிறது உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.
உடனடி காபி பவுடர் வாங்கி காப்பி போட்டுக் குடித்தால் கூட இந்தச் சிக்கல் வருகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி ! இந்தப் பொருட்களிலெல்லாம் இருக்கக் கூடிய ஒரு அமிலமே இந்தச் சிக்கலுக்கான காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் பைட்டோஸ்ரோஜன்ஸ் எனப்படும் ஒருமூலக்கூறு சிகப்பு வைன், பீர், கடலை போன்ற பொருட்களில் அதிக அளவு இருப்பதாகவும், உடலில் இந்த மூலக்கூறு அதிகரிக்கும் போது அது ஆண்களின் உயிரணுக்களை நீர்த்துப் போகச் செய்து அவர்களுடைய உயிரணு எண்ணிக்கையை அழிக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரணுக்களை இழப்பதுடன், வருங்காலத் தலைமுறையையும் ஆரோக்கியமற்றவர்களாக உருவாக்குகின்றனராம்.
இந்த ஆராய்ச்சியை நடத்தில மருத்துவர் கண்டர் குஹேல், மதுப் பழக்கங்கள் உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் எனும் நிலையைத் தாண்டி ஆண்மையையே பாதிப்பது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான மாபெரும் எச்சரிக்கை என தெரிவிக்கிறார்.
மது ஆண்மையை அதிகரிக்கிறது என்னும் மூட நம்பிக்கைக்கும், குழந்தையின்மைக்குக் காரணம் பெண்கள் மட்டுமே எனும் ஆணாதிக்கச் சிந்தனைக்கும் இந்த ஆராய்ச்சி ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment