Followers

திருக்குறள்

Monday, July 15, 2013

பெண்கள் தற்காப்புக்கு 5 டிப்ஸ்

பெண்களைத் தாக்க வருகிறவர்கள் திட்டம்போட்டுத்தான் தாக்க வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பிக்கவும், திருப்பித் தாக்கவும் பயிற்சி தேவை. 
*
ஓர் ஆண் தன்னைத் தாக்கும் போது எப்படி அவனைத் திருப்பித் தாக்க வேண்டும் என்பதற்குக் கற்பனையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சிகளைக் கணவரையோ, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி போன்றவர்களின் உதவியுடன் வீட்டிலேயே தினமும் செய்யலாம். இதனால் உண்மையிலேயே தாக்குதல் வரும் சந்தர்ப்பங்களில் திருப்பித் தாக்குவது எளிதாக இருக்கும். வேகமாக ஓடுவதற்கும், பல தடைகளைக் கடந்து தாண்டிக் குதித்து ஓடுவதற்கும் பயிற்சி எடுக்க வேண்டும். 
*
ஓர் இடத்திற்குப் போகும் போது அந்த இடத்தில் ஆணால் தனக்குப் பாதிப்பு ஏற்படும் என்று தோன்றினால் அந்த இடத்தில் உள்ள பொருட்களை வைத்து அவனை எப்படித் தாக்கலாம், எப்படித் தப்பிக்கலாம் என்பதை முதலில் அந்த இடத்தில் உட்கார்ந்திருக்கும் போது மனக்கண்ணில் கற்பனை செய்து பார்க்க வேண்டும். 
அப்படிச் செய்தால் ஒருவேளை நிஜமாகவே தாக்குதல் நிகழும் போது தப்பிப்பது எளிதாக இருக்கும். உதாரணமாக ஹோட்டலில் உட்கார்ந்திருக்கும் போது ஓர் ஆண் கெட்ட நோக்கத்துடன் தன்னை நெருங்கி வந்தால் சூடான காபியை அவன் முகத்தில் ஊற்றி அவனை நிலைகுலையச் செய்து தப்பித்துவிடலாம். 
*
பெண்கள் தங்கள் கைப்பையில் ஒரு விசிலை வைத்துக் கொள்ள வேண்டும். ஆணின் தாக்குதல் நிகழும்போது அந்த விசிலால் ஒலியெழுப்பினால் அக்கம்பக்கம் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். ஏனெனில் உரத்த குரலில் கத்துவது எல்லாருக்கும் முடியாது. இப்போது பெப்பர் ஸ்பிரே போன்ற தற்காப்புப் பொருட்கள் வந்துவிட்டன. அவற்றையும் பயன்படுத்தலாம். 
*
கூட்டமுள்ள பகுதிகளில் பெண்கள் நடந்து செல்லும்போது கையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது. கைகளைக் கட்டிக் கொண்டு நடந்தால் பின்புறம் இருந்து பிடிப்பவரையோ, அருகே வந்து இடிப்பவரையோ முழங்கையால் தாக்க முடியும். 
*
துப்பட்டாவின் நுனிகள் முதுகுப்புறம் வரும்படி போட்டால் பின்புறமிருந்து துப்பட்டாவை இழுப்பார்கள். அப்போது நமது உடைகள் கிழிந்து விடும். கழுத்து நெரிபடும். முன்புறம் போட்டால் இந்தப் பிரச்சினையில்லை.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.