Followers

திருக்குறள்

Monday, July 15, 2013

லேடீஸ் ஹாஸ்டலால் பெண்களுக்கு ஏற்படும் மனக்குழப்பங்கள்!

இந்த சமூகத்தில் பெண்கள் சிலரிடம் சில குறைபாடுகள் அன்றும் இருந்தன. இன்றும் இருந்து கொண்டிருக்கின்றன. குறைகளற்ற சமூகம் ஒருபோதும் அமையாது. இந்த சமூகத்தைப் பற்றி சரிவர தெரிந்து கொள்ளாமல், லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்து தனிப்பட்ட வாழ்க்கையை தொடங்கும் போது அங்கிருக்கும் குறைகள் பெண்களுக்கு பூதாகரமாகத் தெரிகின்றன. 
வேலை பார்க்கும் இடத்தில் எல்லோரிடமும் சகஜமாகப் பழகினால், அங்கே இருக்கும் குறைகளும் பெண்களுக்ளு தெரியும். பொதுவாக லேடீஸ் ஹாஸ்டல் என்பது வீட்டைப் போன்றது. அங்கு பெண்களின் அந்தரங்கங்களும், பலவீனங்களும், பிரச்சினைகளும் தெரிய வருவதும், அலசப்படுவதும் இயல்பானது.
'
தன்னைப் போலவே அனைவரும் இருப்பார்கள்' என்ற கற்பனையுடன் வாழ்பவர்கள், யதார்த்த பெண்கள் உலகத்தை பார்த்ததும், அவர்களுக்கு மத்தியில் வாழ முடியாமல் அதில் இருந்து விலகி, அவர்களை குறை சொல்கிறார்கள். அவர் சரியில்லை.. இவர் சரியில்லை என்று குறை சொல்வது நமது பலவீனம். விரைவில் உங்களுக்கு திருமணமாகும். 
உன் கணவரைப் பற்றி நிறைய கற்பனைக் கோட்டைகளை உருவாக்கி வைத்திருப்பாய். மாமியார், மாமனார், நாத்தனார், அவரது உறவினர்கள் பற்றி எல்லாம் நிறைய கற்பனைகளை வைத்துக் கொண்டு இல்வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தால், இங்கே நீ பார்த்த குறைபாடுகள் போன்றோ, வேறுவிதமான குறைபாடுகளோ அங்கே அவர்களிடமும் இருக்கும். 
அவர்களும் சரியில்லை என்று நீ குறை சொல்லத் தொடங்கினால், இல்வாழ்க்கையே உனக்கு இல்லாத வாழ்க்கையாகி விடும். இப்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் வாழ்க்கை தான் உண்மையான உலகம்.
குறை சொல்லாமல், குறையில்லாமல் வாழ முடியுமா என்று பாருங்கள் நாம் நல்லவராக இருப்பது என்பது நம்மால் முடிகிற விஷயம். ஆனால் நம்மைச் சுற்றி இருக்கிற அனைவரும் அதை பாராட்ட வேண்டும், அவர்களும் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது முடியாத விஷயம் 

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.