மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
காதல் கவிதைகள் Tamil kadhal kavithaigal,our complete source for latest tamil puthu kavithai in tamil, tamil poem in tamil, tamil poetry in tamil, tamil puthu kavithai, tamil kavithai gallery,Kadhal kavithaigal
Followers
திருக்குறள்
Thursday, December 30, 2010
Monday, December 27, 2010
முகிலின் நிராகரிப்பு மழை!
நீயும் நனைந்தாய்
நானும் நனைந்தேன்
நம்மோடு சேர்ந்து
தானும் நனைந்து
நடுங்கியது மழை!
*
அடித்து பெய்யும்
மழையில் கரைகிறது
ஏதாவது ஒரு காதலின்
கண்ணீர்!
*
மழை
மழையை மட்டும்
கொணர்வதில்லை
சில நேரங்களில்
சில தேவதைகளையும்!
*
நனைந்து சுகித்திருந்த
உன்னை அம்மா
இழுத்துப் போக
சோவென அழத்தொடங்கியது
மழை!
*
சைவமான என்னை
அசைவமாக்கிப் போகிறது
உன் மேல் விழும்
மழைத்துளி!
*
மழை
உன் அருகாமையில்
அருமையாகவும்
தூரத்தில்
அவஸ்தையாகவும்!
*
மழை வேண்டி
வருபவர்களையெல்லாம்
விரட்டியடித்தபடி இருக்கிறான்
கடவுள்!
படிப்பிற்காக வெளியூரிலிருக்கும்
உன்னை ஊருக்குள்
அழைத்து வரும்படி!
*
ஊரிலிருந்து
நீ வருவாயென
நேற்றே வந்து
வாசல் தெளித்துப் போயிருந்தது
மழை!
*
இன்றும் விடாமல்
பெய்தபடி
நீ
என்னைக் குடைக்குள்
அழைத்துக் கொண்ட
அவ்விரவின் மழை!
*
என் கவிதைகளுக்கு
என்ன மேன்மை கிடைத்திடக்கூடும்
உன் கையால்
மழை நாளில்
காகித கப்பல்களாவதைவிட!
*
மழை நின்ற
கணத்தின் இலைப்போல்
முகமெல்லாம்
திட்டுத்திட்டாய்
உன் முத்தங்கள்!
*
சிறுமழை
பெருமழை
எதுவும்
மழையை மட்டும்
கொண்டுவருவதில்லை
உன் நினைவுகளையும்!
*
முகிலின் நிராகரிப்பு
மழை!
உன்னின் நிராகரிப்பு
என் கண்ணீர்!
*
குழைந்தைகளுடன்
நீ நனைந்திருக்க
குதூகலமாய்
பொழியத் தொடங்கியது மழை!
*
என் வேர்கள்
காத்திருக்கின்றன
உன்
மழைக்காக!
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Friday, December 24, 2010
உன் வெட்கத்துக்கு
உன் முக்கால் வாசி அழகு
ஆடைக்குப் பின்னே மறைந்து கிடக்கிறது.
மீதியும் இப்படி வெட்கத்துக்குப்
பின்னால் ஒளிந்து கொண்டால்
நான் என்ன செய்வது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ ராட்சசி என்றேன் – சிரித்தாய்.
நீ கோபக்காரி என்றேன் – சிரித்தாய்.
நீ அழகி என்றேன் – வெட்கப்பட்டாய்.
உண்மையைச் சொன்னால்தான்
வெட்கம் வருமோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னைப் பார்த்ததும்,
தலை குனிந்து, மெல்ல சிரித்து,
ஓடி ஒளிந்து கொள்கிறது என் காதல்!
அதுவும் அழகாய்த்தான் வெட்கப்படுகிறது…
உன்னைப்போல!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதேச்சையாய்
உன் காதில் என் உதடு படும்போது
உன் கன்னத்தில் பூக்குமே ஒரு வெட்கப்பூ…
அப்போது தானடி புரிகிறது
"எதுவாய் இருந்தாலும் ரகசியமாய் சொல்"
என நீ சொல்வதின் ரகசியம்!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் அண்ணனிடம்
என்னை அறிமுகப் படுத்துகையில்,
என் பெயரைச் சொல்லும்போது
கொஞ்சமாய் வெட்கப்பட்டாயே,
அதுவரை எனக்குத் தெரியாதடி
நீயும் என்னைக் காதலிப்பது!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாம் தனிமையில் இருக்கும்போது
இப்படி இடையில் வந்தமர்கிறதே…
உன் வெட்கத்துக்கு வெட்கமே இல்லையா?
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
கிறிஸ்துமஸ்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Thursday, December 23, 2010
என் கல்லறைக்கு
என் இதயத்தை
தந்துவிட்டேன் உன்னிடம்
நான் இறந்தும்
என் உயிர் வாழ்கிறது
இந்த மண்ணிடம்....
காதல் தந்தாய்
இன்று
கனவு ஒன்று
கலைந்தது என்று
கண்ணீர் தந்து போகிறாய்.....
நீ இன்றி
என்னால் வாழ முடியாது என்று சொல்லி
இறந்து போக ஆசைதான்
என்ன செய்வது
கல்லறை கேட்குமே என்னிடம் ....
என் இதயம் எங்கே என்று
என்ன சொல்ல காதலியே?
என் கல்லறைக்கு ?.....
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Thursday, December 16, 2010
காதல் பற்றிய நியுட்டனின் விதிகள்
எப்ப நியுட்டன் என்பவரின் விதிகளை நாம் பள்ளியில படிக்கத் தொடங்கினோமோ, அப்போதிலயிருந்து அந்த விதிகளை வித்தியாசமாக, அந்தந்த நேரங்களுக்கு தகுந்தபடி மாற்றி மாற்றி விளையாடுவது என்பது ஒரு பொழுதுபோக்காகவே இருந்துவருகிறது. நியுட்டன் அந்த மூன்று விதிகளையும் எழுதும் போது அவர் சற்று ரொமான்டிக் மூடில இருந்திருந்தா அந்த மூன்று விதிகளும் எப்பிடி வந்திருக்கும் என்பது சற்று நகைச்சுவையாக...
பொதுவான விதி :
காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அது ஒரு பெண்ணிலிருந்து இன்னொரு பெண்ணுக்கு சில பல செலவுகளுடன் மாற்றப்பட மட்டுமே முடியும்.
முதலாவது விதி :
வெளியிலயிருந்து காதலியோட அப்பா அல்லது அண்ணன் வந்து காதலனோட காலை உடைக்கும் வரைக்கும் காதலன் மேல காதலிக்கு இருக்குற காதலும் காதலி மேல காதலனுக்கு இருக்குற காதலும் தொடர்ந்து அப்பிடியே இருக்கும்.
இரண்டாவது விதி :
காதலன் மேல காதலிக்கு இருக்குற காதலானது காதலனின் பாங்க் பாலன்ஸ்க்கு நேர்விகித சமனாகும். காதலியின் திசையானது பாங்க் பாலன்ஸின் இன்க்ரீமென்ட் அல்லது டிக்ரீமென்டில் தங்கியிருக்கும்.
மூன்றாவது விதி :
காதலன் காதலி கிட்ட தன் காதலை சொல்லும் போதிருந்த விசையானது, காதலி காதலனுக்கு அறையும் போதிருக்கும் விசைக்கு சமமானதும் எதிரானதுமாக இருக்கும்.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Wednesday, December 15, 2010
அயல்தேசத்து ஏழை.....
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!
நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்
வாசனை இருக்கலாம்!
ஆனால் வாழ்கையில்....?
தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!
எங்கள் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயனத்தூனூடே
விற்றுவிட்டு
கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை
வார விடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில்
விரால் பாய்ச்சல்
மாட்டுவண்டி பயணம்
நோன்புநேரத்துக் காஞ்சி..
வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின்
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள்
மறந்து போராட்டம்!
பெண்வீட்டார்
எனகூறி வறட்டு
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின்
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே
"கண்டிப்பாய் வரவேண்டும்" - என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக
சங்கடத்தோடு
ஒரு
தொலைப்பேசி வாழ்த்தூனூடே
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து
ஏழைகள்தான்!
காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்கலெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலேயே...
கரைந்துவிடுகிறார்கள்!
'இறுதிநாள்' நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டு பார்த்தால்
எஞ்சி நிற்பது
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைப்பேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலேயே
நாங்கள் தொலைவில்
யாருக்குக் கேட்குமோ?
ஒவ்வொரு முறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாசப் பார்வை...
நெருங்கியவர்களின்
இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி
மீண்டும் அயல்தேசத்திற்கு!
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Monday, December 13, 2010
அம்மா......
அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.
மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.
பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .
என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.
அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?
எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?
வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?
எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?
உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?
இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.
எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.
போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்
இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
இதெல்லாம் காதல் அல்ல...
காதல் என்பது, இருவரது மனதும் புரிந்து கொண்டு, ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டு, அவருடன் வாழ்ந்தால் நமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அவர் இல்லாமல் நமது வாழ்க்கை இல்லை என்று உணர்வது. ஆனால் இப்போது நாம் ஆங்காங்கே பார்க்கும் இளம் ஜோடிகளைப் பார்த்தால் இந்த உணர்வுகளை அவர்கள் உணர்ந்திருப்பார்களா என்ற சந்தேகமேத் தோன்றும்.
வாழ்க்கையைப் பற்றிய எந்த தெளிவான கருத்தும் இல்லாமல், ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்து கொள்ளாமல், தன் பின்னால் சுற்றிய ஒரேக் காரணத்திற்காக ஒரு ஆணின் காதலை ஏற்றுக் கொள்ளும் எத்தனையோ பெண்கள் உள்ளனர். பார்க்க பளிச்சென்று இருப்பதாலும், தனது நண்பர்கள் முன்னால் அவள் என் காதலி என்று சொல்லிக் கொள்ள பெருமையாக இருக்கும் என்பதாலும், ஒரு பெண்ணை துரத்தி துரத்திக் காதலிக்கும் ஆண்களும் எத்தனையோ...
ரயில் நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலோ இது போன்று மிகச் சிறிய வயதில் காதல் கொண்டிருக்கும் காதல் ஜோடிகளைப் பார்ப்பவர்கள் முகம் சுளிப்பது மட்டும் உண்மை. அந்த வயதில் தங்களுக்கு பிள்ளைகள் இருந்தால் ஒரு நிமிடம் அவர்களை நினைத்துப் பார்க்கும் பெற்றோர்களும் ஏராளம். நம்ம பிள்ளை இப்படி இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் பெற்றவர்களை விட, நம்ம பிள்ளை எங்க சுத்திக்கிட்டிருக்கோ என்று ஏக்க பெருமூச்சு விடும் பெற்றவர்களே அதிகமாக உள்ளனர்.
பள்ளிப் படிப்பின் போதே ஆரம்பிக்கும் இவர்கள் காதல், கல்யாணப் பரிட்சை வரைக் கூட செல்வதில்லை. காதல் எனும் வகுப்பில் சேரவே தகுதியில்லாத இந்த காதலர்கள், கல்யாணப் பரிட்சையை எப்படி எழுதுவார்கள். அப்படியே எழுதினாலும் அதில் இவர்கள் தேர்ச்சி பெற முடியுமா?
தனது பிள்ளைகளுக்கு கல்வியறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக்கு அனுப்பி, பள்ளியில் மாணவர்களுடன் எந்த வகையிலும் நமது பிள்ளை தரம் தாழ்ந்து விடக் கூடாது என்பதற்காக உடை முதல் செருப்பு வரை பார்த்து பார்த்து வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் பிள்ளை ரயில் நிலையத்தில் ஒரு பையனுடன் கொஞ்சி கொஞ்சிப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டால் எப்படி இருக்கும்...
மேலும், செல்பேசிகள் இல்லாத கரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லோர் கையிலும் செல்பேசி உள்ளது. கல்லூரி மாணவர் மட்டுமல்லாமல், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடமும் தற்போது அதிக அளவில் செல்பேசிகள் உள்ளன. இது போதாதென்று பள்ளி மாணவர்களுக்கு இலவச சிம் கார்டுகளை டாக் வேல்யூவுடன் அளிக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஏராளம்.
இந்த நவீன யுகத்தில் ஒரு பெண் தலை குனிந்து நடக்கிறாள் என்றால் அதற்கு என்ன காரணம் என்று கேட்டால்... அவள் மொபைலில் எஸ்.எம்.எஸ். ப்ரீ என்று அர்த்தம் என்கிறது புதிய பழமொழி.
இவர்கள் காதல் என்று சொல்வது உண்மையில் காதலே அல்ல.. வெறும் இனக்கவர்ச்சி. தன்னிடம் சிரித்துப் பேசும், ஆணை/பெண்ணை தான் காதலிப்பதும், அவர்களும் தன்னை காதலிக்கிறார்கள் என்று எண்ணி படிப்பில் கவனம் செலுத்தாமல் வாழ்க்கையை வீணடிக்கும் மாணவர்கள் எத்தனையோ பேர்.
ரயில் நிலையத்திலும், பேருந்திலும் பார்த்து காதலித்து வாழ்க்கையை வீணடிக்காமல், வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, திறமை, வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டு, கல்யாண வயதில், தனக்கு ஏற்றவர் இவர் என்பதை உணர்ந்து கொள்ளும் காதலே நீடிக்கும். நிலைக்கும்.
அதை விட்டுவிட்டு டியூஷன் சென்டரிலும், டெலிபோன் பூத் வாசலிலும் கால் கடுக்க நின்று கொண்டிருந்தாலே அவர் தனது வாழ்க்கைக்கு ஏற்றவர் என்று எண்ணும் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் பிள்ளைகள். பிள்ளைகள் ஏமாற்றுவது பெற்றவர்களை அல்ல.. தங்களது வாழ்க்கையை.
வாழ்க்கையில் தடம்புரள எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஒரு சில வழிகளே உள்ளன. எனவே காதல் எனும் தவறான பாதையில் என்று பாதாளத்தில் வீழ்வதை விட, கல்வி, திறமை எனும் சரியான பாதையில் சென்று சிகரத்தை எட்டுவதே நல்லது.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
பெண் குழந்தை.....
வாந்தி உயிர்
கருதான் என்று
வலிகளை ஏற்க
சிரிப்பு இப்படி என
பிஞ்சினை நெஞ்சில்
தழுவல் நடையும்
கொஞ்சும் சிரிப்பும்
கொலுசுக் கால்களும்
பெண் குழந்தையே கனவில்....
வலிகளைப் பொறுத்து
தேவதையைக் கையில்
வலி மறைந்தது
நமக்குத்தான்
அம்மா சொன்ன போது
வலி அப்போது தெரிந்து
என் பிறப்புக்காய்!.......
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Thursday, December 9, 2010
மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும் ?
மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த காலம் தொட்டே பல விஷயங்கள் கூறப்பட்டு வருகிறது. இவை பெண் அடிமைத்தனத்திற்காகக் கூறப்பட்டவை என்று நீங்கள் நினைத்தால் இது உங்களுக்கல்ல.
மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள்.
குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள்.
நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை.
கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள் பதிவிரதைகள்.
முன் காலத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் கணவன் காலை தொட்டு கும்பிடுவார்கள் பெண்கள். இப்போது காலை தொட்டு கும்பிட வேண்டாம், கணவன் வரும்போது நீட்டிய காலை மடக்கினாலே போதும் என்கிறார்கள் தற்போதைய தத்துவவாதிகள்.
பெண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் பற்றி ஒளவையாரின் அமுத வாக்கினைப் பார்ப்போம்.
தாயானவள் தன் குழந்தையிடம் எவ்வாறு பாசம் காட்டுவாளோ, அப்படி கணவனிடம் பாசம் காட்ட வேண்டும். பணிபுரியும் வேலைக்காரியைப் பால, ஒத்துழைக்க வேண்டும்.
செந்தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமியைப் போல சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். கணவன் கோபித்துக் கொண்டாலும், பூமாதேவியைப் போல பொறுமையாக இருக்க வேண்டும். படுக்கை அறையில் கணவனிடம் அன்பு காட்டி அரவணைத்தக் கொள்ள வேண்டும்.
தேவையான போது மந்திரியைப் போல, நல்ல ஆலோசனைகளையும் கூற வேண்டும். இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற பெண்ணே இல்லத்திற்கு ஏற்ற இனிய பெண்ணாக இருப்பாள்.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.