Followers

திருக்குறள்

Thursday, September 22, 2011

உன் ஞாபகங்கள் மட்டும்..!

கொட்டும் மழைக்குள் 
ஒற்றைக் குடைக்குள் 
ஓயாத அடை மழையென 
உன் நினைவுகள்..!


சுற்றும் பூமி நிற்கும்போதும் 
மறக்காத சுவாசமாய்
உன் ஸ்பரிசம்..! 


மழை நின்று போனது 
நீயும் நானும்
பிரிந்துசெல்ல மனமின்றி 
பிரிந்து சென்றோம்.!.


காலங்கள் கடிவாளங்கள் இல்லாத 
குதிரையாய் கால் போகும்
திசை எங்கும் ஓடிப்போனது..! 


ஒரே மூச்சில் வாசித்து முடிக்கப்பட்ட
புத்தகத்தின் பக்கங்களாய் 
பத்து ஆண்டுகள்
சத்தமின்றி கழிந்து போனது..! 
இன்னும் இளமை மாறாமல் 
அதே புன்னகையோடு எப்பொழுதும் 
தலையசைக்கும் மரங்கள்..! 


மண்ணைக் கட்டிக்கொண்டு
இன்னும் நமக்காய் 
காத்துக் கிடக்கும் உறவுகளாய் 
பார்க்கும் திசை எங்கும் 
பச்சை நிறத்தில் புற்கள்..! 


இன்னும் பழமை மாறாமல் 
அதே பொலிவுடன் அந்த இடம் . 
இதோ அதே மழை 
அதே ஒற்றைக் குடை 
ஆனால் நீ அருகில் இல்லை..! 


வெகு நேரம் காத்துக் கிடந்தேன் 
நீ வரவில்லை . 
அன்று உன்னையும் என்னையும் 
ஒன்றாய் நனைத்த 
இந்த மழையில் இன்று நான் மட்டும் 
தனிமையில் நனைகிறேன்...!


உன் நினைவுகளுடன் 
நான் கடந்து செல்லும் 
ஒவ்வொரு இடங்களிலும் 
மழை நின்றபின்னும் 
தூறிக்கொண்டிருக்கிறது 
உன் ஞாபகங்கள் மட்டும்..!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

கணினி - ஆணா... பெண்ணா..?


ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் 
தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்..........

மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன 
காரணங்கள் இதோ... 


1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..

2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

4) எந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி 
தோணும்...!

மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க.. அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ...

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட 
வண்டவாளம் தெரியும்..

3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்... ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு 
தெரியாது..

4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை... ஆனா பெரும்பாலான 
சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் 
பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

தெரியுமா உங்களுக்கு!....


வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..

புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?) 

சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்

சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.

வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதிபடுத்த அனுப்புகிறது.

லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை uncopyrightable

குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.

எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.

வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, September 14, 2011

மழை பெய்யும் போது

"மழை பெய்யும் போது 
அதில் நனைந்து பார் 
என் கண்ணீர் 
துளிகள் அதில் 
கலந்திருக்கும்"

"உன்னை பிரிந்திருக்கும் 
சோகம் எனக்கு 
இப்போது இல்லை, 
தயவுசெய்து கனவில் 
வருவதை 
நிறுத்திவிடாதே! "
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

விடுமுறைக் காதல்...!

கள்ளிச் செடிகளும் 
முளைக்கத்தயங்கும் 
களர்நிலமான என் இதயம் 
நீ கால் பதித்துச் சென்றதும் 
பூப்பூக்க ஆரம்பித்துவிட்டது...!


உன் கல்லூரி விடுமுறைக்காலம் 
என் வாழ்வின் வசந்த காலம்...!
வறண்ட என் பாதையில் 
நிதம் தண்ணீர் தெளித்துக் 
கோலமிட்டாய்....!


உன் விழிகளின் ஓரப்பார்வையோ 
என் இரவுகளின் விடியல்களாக
வியாபித்துக் கொண்டிருக்கின்றது...!


விதியின் விளையாட்டால் 
என் இதயத்தின் எமனாக 
எதிர்வீட்டிலேயே 
குடிவந்திட்டாய்...!


முதல் பார்வையிலேயே என்னை 
மொத்தமாய் சில்லுடைத்துச் 
சிதறச் செய்தாய்...!


உன் பார்வையில் பந்தாகிப்போன 
என் இதயம் ,
முட்டிமோதி காற்றிறங்கி 
காத்திருந்தது உன் காதலுக்காக...!


இரண்டே நாளில் 
மௌன மொழிபேசிய உன் கண்கள்,
ஏனோ தெரியவில்லை
இதழ்ப் பூட்டைமட்டும் 
திறந்திட மறுத்தது...!


எத்தனை நாட்கள்தான் 
சொல்லாத காதலைச் சுமந்து 
கொண்டு திரிவது...?

என் இதயம் உனக்கல்லாது 
வேறுயாருக்காவது 
நிச்சயிக்கப் பட்டிருக்குமோ 
என்ற ஐயத்தில் நின்ற என்னை..,


நிஜத்தில் இழுத்து நெஞ்சைக் கிழித்து 
இதயத்தைப் பெயர்த்துக் கையோடு 
கொணர்ந்து சென்றாய்...உன் ஊருக்கு...!


உண்மை விளங்கவே 
ஒருவார காலம் பிடித்த என் 
நெஞ்சம் ஊமையாகிக் 
காத்திருந்தது....

உன் அடுத்த விடுமுறைக்காக...!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, September 9, 2011

இரப்பர் வளையல்கள்


உடைந்தால் 
கலங்குவாயென்று 
இரப்பர் வளையல்கள் 
வாங்கினேன்! 
நீயோ 
அளவு சரியில்லையென்று 
இளைக்கத் தொடங்கிவிட்டாயே!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

தாய்மை...!



அம்மா,
அணுவைச் சிதைத்து 
ஏழ்கடலைப் புகட்டிப் 
பொதுவாய் நின்ற 
ஓர் இன்பக்கொள்கை!
அம்மா...!

உலக வாழ்க்கைக்கு 
அப்பாற்பட்ட ஓர் உண்மை 
உயிர்பெற்று உலவுகிறது 
இவ்வுலகில்...!


அம்மா என்ற மூன்றெழுத்து ,
மனம் என்ற மூன்றில் பிறந்து,
உயிர் என்ற மூன்றில் கலந்து,
தாய்மை என்ற மூன்றில் 
முடிசூடிக்கொள்கிறது,
இவ்வுலக உறவுகளிடம்...!


ஆயிரம்கோடி எழுத்துக்கள் இருந்தும் 
வர்ணிக்க முடியாத வார்த்தைகளால் 
வேயப்பட்ட ஓர் அன்புக்கூரை,
அம்மா...!


ஆண்டாண்டு அழுதுபுரன்டினும் 
ஆண்களுக்குக் கிட்டாத ஓர் 
அரிய உணர்வு,
தாய்மை...!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, September 8, 2011

HAPPY ONAM

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, September 1, 2011

யாராலும் தடுக்கமுடியாத நிலையில்…!!!


பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையில்
வாழ்வின் சில குறியீடுகளாக
காதல்…!
தொலைவாகிப்போகும்
புள்ளிகளாக…
ஒரு விளிம்பில் நான்

மறுவிளிம்பில் அவள்

காலங்கள்
கனவாய்ப் போனபின்
நெருப்பில் நின்றுகூட
நீ…
அழக்கூடும்…!
கண்ணீரைப்போலவே
காதலும்
கணத்தின்பாதியில்
உன்…
கண்முன்னே கருகக்கூடும்…!

ஒரு இனந்தெரியாத இராகம்
நரம்புகளில் வீணைமீட்ட
ஒரு மர்மசோகம்
ஓடிவந்து மனசைத்தாக்க
அப்போது…
யார் அழுவார் – உன்
நெஞ்சின் சோகம் தீர்க்க…???

பூக்களுக்கும் முட்களுக்கும்
இடையில்…
சிறியதூரம்தான்
சில சமயங்களில்…
முட்களின் தூரம்வரைத்தான்
உன்னால் பயணிக்கமுடியும்
காயங்களுக்கு நடுவில்
பிரிவுகளும்…
சிலநேரம் வசப்படலாம்
யாருடைய பிரிவையும்
யாராலும் தடுக்கமுடியாத நிலையில்…!!!



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஏதாவது ஒரு காதலின்

நீயும் நனைந்தாய்
நானும் நனைந்தேன்
நம்மோடு சேர்ந்து
தானும் நனைந்து
நடுங்கியது மழை!

*

அடித்து பெய்யும்
மழையில் கரைகிறது
ஏதாவது ஒரு காதலின்
கண்ணீர்!

*

மழை
மழையை மட்டும் கொணர்வதில்லை
சில நேரங்களில்
சில தேவதைகளையும்!

*

நனைந்து சுகித்திருந்த
உன்னை அம்மா
இழுத்துப் போக
சோவென அழத்தொடங்கியது
மழை!

*

சைவமான என்னை
அசைவமாக்கிப் போகிறது
உன் மேல் விழும்
மழைத்துளி!

*

மழை
உன் அருகாமையில்
அருமையாகவும்
தூரத்தில்
அவஸ்தையாகவும்!

*

மழை வேண்டி
வருபவர்களையெல்லாம்
விரட்டியடித்தபடி இருக்கிறான்
கடவுள்!
படிப்பிற்காக வெளியூரிலிருக்கும்
உன்னை ஊருக்குள்
அழைத்து வரும்படி!

*

ஊரிலிருந்து
நீ வருவாயென
நேற்றே வந்து
வாசல் தெளித்துப் போயிருந்தது
மழை!

*

இன்றும் விடாமல்
பெய்தபடி
நீ
என்னைக் குடைக்குள்
அழைத்துக் கொண்ட
அவ்விரவின் மழை!

*

என் கவிதைகளுக்கு
என்ன மேன்மை கிடைத்திடக்கூடும்
உன் கையால்
மழை நாளில்
காகித கப்பல்களாவதைவிட!

*

மழை நின்ற
கணத்தின் இலைப்போல்
முகமெல்லாம்
திட்டுத்திட்டாய்
உன் முத்தங்கள்!

*

சிறுமழை
பெருமழை
எதுவும்
மழையை மட்டும் கொண்டுவருவதில்லை
உன் நினைவுகளையும்!

*

நம் உலகில்
நான்
நீ
பின், நமக்கான மழை!

*

நீ மழையாக
நான் துளியாக
மெல்ல பொழியட்டும்
காதல்!

*

முகிலின் நிராகரிப்பு
மழை!
உன்னின் நிராகரிப்பு
என் கண்ணீர்!

*

குழைந்தைகளுடன்
நீ நனைந்திருக்க
குதூகலமாய்
பொழியத் தொடங்கியது மழை!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

முடியாது என்று தெரிந்தும்

நான்
நானாக இருக்க
முக்கியகாரணம்
நீதான்……

………………………………………………

ஜீபூம்பா மாதிரி
நேரங்களும்
நொடிகளும்
நிமிடங்களும் செல்கின்றன…
உன்னோடு நான் பேசுகையில்….
……………………………………………………..

எத்தனை தவறுகள் செய்தாலும்
உன்னிடம் மட்டும், நான்
உண்மையாகவே
இருக்கவிரும்புகின்றேன்…..

……………………………………………………….

முடியாது என்று தெரிந்தும்
விடாமுயற்ச்சியுடன்
என்னையும் அழகு படுத்து
முயற்ச்சிப்பவள் நீதான்….

……………………………………………………
நீ
எனை தொட்ட
நொடிகளில்
லேடிஸ் பிங்கரின் அர்த்தம்
முழுதாய் விளங்கியது…

…………………………………………………..

எதைகண்டு
மயங்கினாய் என்னிடம்?
லேசானநகைச்சுவையும்,
பளிர்சிரிப்பையும் தவிர,
என்னிடம் என்ன இருக்கின்றது???
………………………………………………………..

சில நேரங்களில்
பயங்கர கோபம்வரும்
உன்மீது….

உன்னைஅழ வைக்க
எனது மனம் கணக்கு போடும்…

சாத்தியமில்லாத செயல், என்று
சிரிக்கின்றது…
எனது மனசாட்சி…

…………………………………………………..

மாதத்தில் இரண்டு பீரை
ஒன்றாக குறைத்த சர்வாதிகாரி
நீதான்….

…………………………………………….

நீ
நானாக இருப்பதால்,
நான் நானாக இல்லை…

……………………………………………..
உன்னிடம் மட்டும்
முடியாது என்று தெரிந்தும்…
முடியும் என்று ,
பந்தயம் கட்டுகின்றது
என் இளகிய மனது…

………………………………………………
நீ
என் மடியில்
தலைசாயும் போதுதான்..
பல
கூடுதல் பொறுப்புகள்
நினைவுக்கு வந்து தொலைக்கின்றன….

………………………………………………….

அரைமணிநேரம்
என்வாயில்
அரைபட்ட
சூயிங்கம் கூட
உனக்கு அல்வாதான்….

…………………………………………………….

கண்ணெதிரே
கூடுதல் சுவை சேர்க்கபட்டது
நீ
கடித்து கொடுத்த,
சாக்லெட்டில்…

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.