Followers

திருக்குறள்

Wednesday, September 19, 2012

pattayakelappu has invited you to join Twitter!

 
Top corners image
     
 
   
 
 
 

pattayakelappu has invited you to join Twitter!

 
 
  Accept invitation  
 
     
 

Twitter helps you stay connected with what's happening right now and with the people and organizations you care about.

 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, September 18, 2012

pattayakelappu has invited you to join Twitter!

 
Top corners image
     
 
   
 
 
 

pattayakelappu has invited you to join Twitter!

 
 
  Accept invitation  
 
     
 

Twitter helps you stay connected with what's happening right now and with the people and organizations you care about.

 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, September 5, 2012

தேரும் கடவுளும்!!!

அமர்க்களமாய்த்தேர்,

உள்ளிருந்தகடவுளுக்கோ

ஆவல்!

வருடத்தில்ஒருநாள்தானே

ஊரைச் சுற்றிபார்கிறார்!

 

அனைவரதுமுகத்திலும் மகிழ்ச்சி

தேரை இழுக்கப்போவதால்!

அனைவரும்இழுத்தனர்.

நடுவீதியைஅடைந்தது தேர்.

அதற்குப்பின்தான் குழப்பமே

யார்வீதியில்முதலில் இழுத்துச் செல்வதென்று!

 

ஒருமேல்சாதிக்கும்,

மற்றுமொருமேல்சாதிக்கும்

வாக்குவாதம்.

 

சூடத்தை ஏந்திய

கைகளில்

அரிவாள்களும், கத்திகளும்

நடுங்கினார்கடவுள்.

தவறுதலாய்த்தன்னை

ஒரு சாதியாய்நினைத்து

மற்ற சாதியினர்

வெட்டிவிடுவார்களோ? என்று.

 

முடிவாய்க்கடவுளிடமே

கேட்டனர் மக்கள்,

"யார் வீதியில்

முதலில்இழுத்துச்செல்வது?"

 

"மனிதர்கள் இருக்கும் வீதியில்

முதலில்இழுத்துச்செல்லுங்கள்"

கடவுளின் பதில்.

 

அனைவருக்கும்ஒரே குழப்பம்

மனிதர்கள் எந்தவீதியில்

இருக்கிறார்கள்???

 

கடவுளின் பதிலால்

நடுத்தெருவில்

அனாதையாய்

தேரும், கடவுளும்!!

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

எங்கள் ஊர் எம்.எல்.ஏ-விற்கு ஓர் கடிதம்

 

 

 

 

நேற்று

பாலம்கட்டினீர்

இன்றுபள்ளத்தில்

வந்தவெள்ளத்தில்

பாலம்சென்றுவிட்டது.


ரோடுபோட்டீர்

அதுமழையில்கரைந்துவிட்டது!

 

பத்திரிக்கையாளர்கள்முட்டாள்கள்

உங்களைத்தவறாகப்பிரசுரிக்கிறார்கள்!

மழைபெய்வதற்கெல்லாம்நீங்களாகாரணம்?

 

உங்களைப்பார்த்து

மூன்றாண்டுகள்முடிந்துவிட்டது

காணவில்லையென்று

விளம்பரம்கொடுக்கலாமென்றாலும்

புகைப்படம்கைவசமில்லை

முகமும்ஞாபகமில்லை.

 

காணவில்லையென்று

புகார்செய்யாலாமென்றாலும்

காவல்துறையும்தேடிக்கொண்டிருக்கிறதாம்

பதின்மூன்றுவழக்குகளுக்காக.

 

அதுஎன்னவோ தெரியவில்லை

எங்களுக்குமட்டும்

ஒருமனிதரைத் தேர்ந்தெடுக்கும்

வாய்ப்புவழங்கப்படுவதேஇல்லை!

 

காந்திமட்டும்

மறுபிறவிஎடுத்திருந்தால்

பிறந்தஉடனே

மூச்சடக்கிசெத்திருப்பார்,

தேவையில்லாமல்

கோடிஉயிர்களைக்

கொடுத்தோமேஎன்பதற்காக!

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

உன்னை காதலிப்பதற்கு ................

 

·               நான் நிலாவை

வெறுக்கிறேன்

உன் பெயரை

அபகரித்துக்கொண்டதற்காக!

 

 

 

·               அதிகாலையில்

ஒவ்வொருபூக்களும்

உன் வருகைக்காகக்காத்திருக்கின்றன.

அதில்

ஒரு பூ நான்!

 

 

 

·               கண்கள் பேசிக்கொள்ளும்

மௌனத்தின் சப்தத்தில்

மொழிகளின் சப்தம்

நின்றுவிடுகிறது.


 

·               உனது சோம்பல்கூட

உற்சாகம்தான் – எனக்குள்.

 

 

 

 

·               உன்னை காதலிப்பதற்கு

நான்வேண்டும்

உன்னால்காதலிக்கப்படுவதற்கும்

நான்தான் வேண்டும்

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஒரே நாளில் பணக்காரனாக! வீடு, கம்பேனியை ஒரே நாளில் முன்னேற்ற!

 கேட்டுக்கோங்க மக்களேவீடு, கம்பனி இதையெல்லாம் ஒரே நாளில்முன்னேற்றுவது என்பது சாதாரண விசயமில்லைஆனால் கீழ்காணும் அறிவுரைகளைபின்பற்றினால் உடனே ஒரே நாளில் முன்னேறிவிடலாம்.

 

  • முதலில் கடிகாரத்தை 10 நிமிடம் அதிகப்படுத்திவைக்கவும். இதனால் நம் கம்பேனி மற்ற கம்பனிகளைவிட பத்து நிமிடம் முன்னாடிபோய்க்கொண்டிருக்கும்! (எப்பிடி உடனே முன்னேற்றி விட்டோமா??)

 

  • கிழக்கு பார்த்து இருக்கும் கதவைஇடித்துவிட்டு, தெற்கு பார்த்த மாதிரி வைக்கவும் (எப்பிடி பூகோள ரீதியா முன்னேறிடுச்சா?)

 

  • எல்லோரையும் டை கட்டிவிட்டு வேலைக்குவரச்சொல்லவும்! (ஏன்னா டை கட்டுறவன் எல்லாம் நன்றாக வேலை செய்வான்!)


 

 

  • அலுவலக கண்ணாடிகளை ஸ்டிக்கர் கொண்டுமறைத்திடவும்! (அப்பறம் எதுக்கு கண்ணாடின்னு கேட்கப்பிடாது). இப்ப உங்களை யாராவதுபார்க்க வேண்டுமென்றால் கண்ணாடிக்கு மிக அருகில் வந்துதானே பார்க்க முடியும்!அப்படின்னா நீங்க அவங்களை விட்டு தூரமா முன்னேறிட்டிங்கன்னு அர்த்தம்!

 

  • வடகிழக்கு மூலையில் இருக்கும் கழிவறையை இடித்துவிட்டு தென்மேற்குமூலையில் வைக்கவும் (வெளிய போறதுதானே எந்தப்பக்கம் போனாத்தான் என்ன? என்றெல்லாம்பேசக்கூடாது!)

 

  • வீட்டின் உட்பகுதியில் உயரத்தை கூட்டவும். உயரமா வாழ்ந்தாத்தான்சீக்கிரமா உயர முடியும்!

 

  • அமரும் அலுவலக டேபிளை யாருக்கும் தெரியாதவாறு, உங்களை மறைத்தவாறுமாற்றிவிடவும்! (உங்கள் வளர்ச்சி யாருக்கும் தெரியாது, தடுக்க முடியாதில்லையா?)

 

  • இதையெல்லாம் நகைச்சுவை என்று கருதுபவர்களுக்கு! நூற்றில் என்பதுசதவிகிதம் வீடு, கம்பெனிகள் இதில் குறைந்தபட்சம் ஏதாவது இரண்டையாவதுகடைபிடிக்கிறார்கள்!



இப்ப உங்களுக்கும் முன்னேற ஆசை வந்திடுச்சா? பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

பிரிவு

பிரிவை நினைத்தேன்

உயிர் வலித்தது,

அவளைநினைத்தேன்

வலிக்கு ஆறுதல்!

 

 



நான் கனவுகளை விரும்புகிறேன்

அவைகள்எவ்வாறாயினும்!.

கனவில்தான்

என் காதலி

என்னைக் காதலிக்கிறாள்!

 



எனது காதல்

உன்னைநினைப்பதற்காக அல்ல;

என்னைமறப்பதற்காக

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்

ஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்

 

 

எனக்கும் அவளுக்கும்

ஒரு ஒற்றுமை

என் நண்பனைப்பிடித்துப்போனதுதான்!

 

 

 

 

 

வடக்கு தெற்கு

ஈர்க்கும் காந்தப்புலம்

அவள் கண்கள்!

 

 

 

 

 

முகத்தைக் காட்டுபவளே

முழுவதையும் காட்டேன்?

வெண்ணிலா!

 

 

 

 

 

 

ரோஜாவின் அருகே

முள்

அவள் அண்ணனோ?

 

 

 

 

 

அவள் காந்தியைப்போல்

அமைதியானவள் என்றேன்

குஜராத்தில் பூகம்பம்!

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.